100 நாள் வேலை சம்பளத்தை உயர்த்த வேண்டும் தொப்பம்பட்டியில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பழநி, ஜூலை 11: பழநி அருகே தொப்பம்பட்டியில் 100 நாள் வேலைத்தட்ட சம்பளத்தை உயர்த்த வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி தலைமை வகிக்க, கனகு துவக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள 100 நாள் வேலையை உடனடியாக வழங்க வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள சம்பளம் ரூ,319ஐ முழுமையாக வழங்கிட வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாகவும் சம்பளம் ரூ.600 ஆகவும் உயர்த்தி வழங்கிட வேண்டும். 100 நாள் வேலையை சுழற்சி முறையில் வழங்காமல் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட செயலாளர் அருள்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது