100 சதவீத வாக்களிப்பை உறுதிசெய்ய விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

காஞ்சிபுரம்: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் பொதுமக்கள் 100  சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் தேர்தல்  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதைெயாட்டிகாஞ்சிபுரம்  மாவட்டத்தில் 100 சதவீத வாக்களிப்பை உறுதிசெய்யும் விதமாக 1500 க்கும்   மேற்பட்டோர் கலந்துகொண்ட விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர்  மகேஸ்வரி ரவிக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அண்ணா மாவட்ட  விளையாட்டு அரங்கத்தில் மாபெரும் தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்  கால்நடை மருத்துவமனை சாலை, பஸ் நிலையம், பச்சையப்பன் பள்ளி, மேட்டு  தெரு வழியாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.இதில், ஆண்கள் பிரிவில் கே.அருண் முதல் பரிசு, எம்.விக்னேஷ் 2ம் பரிசு,  என்.ரமணா 3ம் பரிசு பெற்றனர். பெண்கள் பிரிவில் டி.நிரோஷா முதல் பரிசு,  ஆர்.யுவராணி 2ம் பரிசு, எம்.அர்ச்சனா 3ம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற  அனைவருக்கும் மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட கலெக்டருமான மகேஸ்வரி  ரவிக்குமார் கோப்பைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில்  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, மாவட்ட விளையாட்டு  அலுவலர் ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திவாகர், உதவி திட்ட  அலுவலர் எழிலரசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்