100 நாள் வேலை திட்டத்தை முடக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவாடானை,அக்.23: திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு சாலை பகுதியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தாலுகா தலைவர் அருள்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் கலையரசன், தாலுகா செயலாளர் சேதுராமன், தாலுகா பொருளாளர் நாகநாதன் உள்ளிட்டவர்கள் சிறப்புரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு போதுமான நிதியை வழங்க வேண்டும். வேலைக்கான சம்பளத்தை 15 நாட்களுக்குள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை திட்டத்தில் பணி செய்பவர்களுக்கு 100 நாட்கள் வேலை தருவதை உறுதி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களில் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தாலுகா நிர்வாகிகள் ரத்தினம், முருகன், சகாயமாதா, சித்திரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்