100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி மாற்றுதிறனாளிகள் விழிப்புணர்வு பேரணி

திருவாரூர், ஏப். 3: தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர்ளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதனை வலியுறுத்தி நேற்று மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகிலிருந்து விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சாரு கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஆர்.டி.ஒ சங்கீதா, மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் புவனா, தாசில்தார் செந்தில்குமார், பி.ஆர்.ஒ செல்வகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து கலெக்டர் சாரு கூறுகையில், நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் வரும் 19ந் தேதி நடைபெறவுள்ளது. அதனையொட்டி பொதுமக்கள் அவசியம் வாக்களிக்க வேண்டுமென்பதனை வலியுறுத்தும் விதமாகவும், வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஏற்கனவே மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான ரங்கோலி போட்டிகள், யோகா பயிற்சி, ஜமாத்தார்களுடன் ஆலோசனை கூட்டம், மராத்தான் போட்டி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து இதேபோன்று மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி