விவசாயி வீட்டின் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

திருத்தணி: திருத்தணி அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் வசிப்பவர் சுப்பிரமணி (55), விவசாயி. இவரது வீட்டின் அருகே காப்புக்காடு உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியின் வீட்டின் பின்புறத்தில் மலைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. மலைப்பாம்பு வீட்டைச்சுற்றி அங்கும் இங்கும் நெளிந்து திரிந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். பிறகு ீதீயணைப்பு வீரர்கள் வந்து மரக்கட்டைகளுக்குள் மறைந்திருந்த மலைப்பாம்பை பிடித்தனர். 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை சாக்குப்பையில் கட்டி திருத்தணி அருகே உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று பத்திரமாக விட்டனர்.

Related posts

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி

நாமக்கல் முட்டை விலை ரூ.5.15 ஆக நீடிப்பு

நீட் முறைகேடு – குஜராத் பள்ளி உரிமையாளர் கைது