10, பிளஸ்2 வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு: பாடத்திட்டம் வெளியீடு

சென்னை: பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 19 மாதங்களாக நிலவிய கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. செப்டம்பர் மாதம் 9, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்காக மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று முற்றிலும் நீங்காத நிலையில், சுழற்சி முறையின் கீழ் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இதுவரை நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில் பள்ளிக் கல்வி ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தேர்வுக்கான பாடத்திட்டங்களை அனுப்பி வைத்துள்ளார். அது குறித்து அவர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளிக் கல்வித்துறை உத்தரவின் பேரில் 2021-2022ம் கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவற்றை அனைத்து பள்ளிகளுக்கும் அவர்கள் அனுப்பி வைப்பார்கள். அந்த பாடத்திட்டங்களின் அடிப்படையில் திருப்புதல் தேர்வுகளை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதன்படி 10ம் வகுப்புக்க தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் திருப்புதல் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதேபோல பிளஸ் 2 வகுப்புக்கு பொதுத் தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல்-தாவரவியல், உயிரியல்-விலங்கியல், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளியல், வரலாறு, புவியியல், உள்ளிட்ட 27 பாடங்களுக்கும் திருப்புதல் தேர்வு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை