10 ஆண்டுகள் பணிநிறைவு செய்த ஓட்டுநர்களுக்கு ஊதிய உயர்வு: மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை

சென்னை: தமிழக அரசு பொதுப்பணித்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:  தமிழகத்தின் நலனை காக்கவும் பண்பாடு கலாச்சாரத்தை பாதுகாத்திடவும் மாநில உரிமையை மத்திய அரசிடம் மீட்டெடுக்க பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து இருக்கும்  திமுகவுக்கு அதன் தலைமைக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அரசு துறையில் பணிபுரியும் நீண்ட கால கோரிக்கைகளை 31-05-2009 தேதியை முன் வைத்து பிறப்பிக்கப்பட்ட அரசானையை ரத்து செய்து 10 ஆண்டுகள் பணிநிறைவு செய்த ஓட்டுநர்கள் அனைவருக்கும் ஊதிய மாற்றத்தினை நிர்ணயம்  செய்தும், ஓட்டுநர்களின் கல்வி தகுதிகேற்ப பதவி உயர்வும், வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்திடவும்,  எங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் ஆட்சியாக நாங்கள் எதிர்பார்க்கிறோம். எதிர்பார்ப்பை  நிறைவேற்றும் திமுக ஆட்சியை வரவேற்கிறோம் வாழ்த்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. …

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை