10 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த மழைநீர் கால்வாய் சீரமைப்பு

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி 3வது வார்டில் வரதா ரெட்டி நகர், ஓம்சக்தி நகர், ஓம்சக்தி நகர் விரிவாக்கம் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த வார்டில், 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள கால்வாய்கள் கடந்த 10 ஆண்டுகளாக அடைப்புகள் ஏற்பட்டு, தண்ணீர் செல்ல வழி இல்லாமல் கிடந்தது. இதனை, சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால், கால்வாயில் முழுவதும் குப்பை, கழிவுகள் நிறைந்து காணப்பட்டது. இதுபற்றி 3வது வார்டு மக்கள் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை.இந்நிலையில், சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 3வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர் ரவிக்குமார், அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தனது சொந்த செலவில், வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய்கள் அனைத்தையும் தூர்வாரி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். பல ஆண்டுகளாக சீரமைக்காமல் கிடப்பில் கிடந்த கால்வாயை, அப்பகுதி கவுன்சிலர் சீரமைத்து தருவதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்….

Related posts

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 818 கன அடியாக சரிவு..!!

ஒரே இடத்தில் பணியாற்றும் அனைத்துவகைப் பணியாளர்களை பணியிடமாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐ.டி. நிறுவனமான கேப்ஜெமினி, தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடி முதலீடு செய்கிறது!!