10 மடங்கு அபராத தொகை வசூலிப்பதை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்; அண்ணா தொழிற்சங்க பேரவை வலியுறுத்தல்

சென்னை: 10 மடங்கு அபராத தொகை வசூலிப்பதை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என அண்ணா தொழிற்சங்க பேரவை வலியுறுத்தியுள்ளது. அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய அரசின் தரைவழி சாலை போக்குவரத்து  2019ம் ஆண்டு செப்டம்பரில் சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அதிகபடியான  அபராத கட்டண முறைகளை வெளியிட்டது. தமிழகத்தில் கடந்த 26ம் தேதி முதல் பத்து மடங்கு அபராத தொகை, வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. அரசு வசூலிக்கும் அபராத தொகையில் இருந்து 700-800 ரூபாய் மதிப்புள்ள தலைகவசத்தை வாகன ஓட்டிகளுக்கு வழங்கலாம். அபராதத்திற்கு பதில் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு முதல் முறை எச்சரிக்கையும்,  இதே நிலை தொடர்ந்தால்   நூதனமான முறையில் சிறிய தண்டனையாக  மரம் நடுவது,  தூய்மை பணி, பொது வேலை என்றும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமே தவிர மக்களை ஒரேயடியாக பழி வாங்க கூடாது. எனவே இந்த புதிய அபராத தொகை வசூலிப்பதை, உடனே அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

உலக தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் தாம்பரம் ரயில் நிலைய வளாகம் ₹1000 ேகாடியில் மறுசீரமைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு

மெட்ரோ ரயில் பணி காரணமாக 2 நாட்கள் மடிப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு