10வது சுற்றிலேயே ராசா வெற்றி உறுதி: பாதியிலேயே கிளம்பிய பிற கட்சி நிர்வாகிகள்

 

ஊட்டி, ஜூன் 5: நீலகிரி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலையில் இருந்த நிலையில், பாஜ மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் 10வது சுற்றுக்கு மேல் வெளியேறினர். ஊட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்தது. நேற்று காலை திமுக பாஜ மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்திருந்தனர்.

வாக்கு எண்ணிக்ைக துவங்கிய முதல் சுற்று முதல் திமுக வேட்பாளர் ஆ.ராசா 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் ஒவ்வொரு சுற்றிலும் முன்னிலை வகித்து வந்தார். இதனால், பாஜ மற்றும் அதிமுக வேட்பாளர்களின் தோல்வி உறுதியானது. இதனை தொடர்ந்து, அங்கு கூடியிருந்த பாஜ மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் உட்பட நிர்வாகிகள் பலரும் வெளியேறினர். அதேபோல், அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறினர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்