10ம் வகுப்பு கேள்வித்தாளை வெளியிட்ட தனியார் பள்ளி நிர்வாகத்தினரை கைது செய்யக்கோரி பாஜவினர் ஆர்ப்பாட்டம்-சித்தூரில் நடந்தது

சித்தூர் : 10ம் வகுப்பு கேள்வித்தாளை வெளியிட்ட தனியார் பள்ளி நிர்வாகத்தினரை கைது செய்ய வேண்டும் என்று பாஜவினர் கூறின்ர்.சித்தூரில் உள்ள மாவட்ட கல்வித்துறை அலுவலகம் முன் பாஜவினர் 10ம் வகுப்பு கேள்வித்தாள் வெளியானதை கண்டித்தும், தனியார் பள்ளி உரிமையாளர்களை கைது செய்யக்கோரியும்,  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜ மாவட்ட தலைவர் சிவகுமார் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தில் மக்கள் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறதா என புரியாத புதிராக உள்ளது. ஜெகன்மோகன் ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. முதல் நாளன்று தெலுங்கு வகுப்பு தேர்வு நடைபெற்றது. இதையடுத்து 9.30 மணிக்கு மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். பின்னர், 9.45 மணிக்கு தேர்வு மையத்தில் இருந்து தெலுங்கு கேள்வித்தாள் வாட்ஸ் அப் மூலம் வெளியானது. இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அலுவலர் சித்தூர் மாவட்டத்தில் கேள்வித்தாள் வெளியாகவில்லை என்று கூறுகிறார். ஆனால், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.   மேலும், தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் கேள்வித்தாள்களை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளனர். இதற்கு உடைந்தையாக அரசு பள்ளி ஆசிரியர்களும் இருந்துள்ளனர். மாநிலம் முழுவதும் போலீசார் 60 பேரை கைது செய்து உள்ளனர். அவர்கள் அனைவரையும்  பணி இடைநீக்கம் செய்து மாநில கல்வித்துறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆனால் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் அவர்களின் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடிக்க வேண்டும் என்று வாட்ஸ் அப்பில் கேள்வித்தாள்களை வெளியிட்டுள்ளது. எனவே தனியார் பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும். அதேபோல் அரசு பணியில் இருக்கும் ஆசிரியர்கள் மீது பணிநீக்கம் செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.எங்கள் கோரிக்கைகளை உடனடியாக மாநில கல்வித்துறை ஆணையம் நிறைவேற்ற வேண்டும் இல்லையென்றால் மாநிலம் முழுவதும் பாஜ கட்சியினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது நகர இளைஞரணி தலைவர் தாமு, பொருளாளர் வேணு யாதவ் உள்பட ஏராளமான பாரதிய ஜனதா கட்சியினர் உடனிருந்தனர். …

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு

கேதார்நாத்தில் பெண் பக்தருக்கு பாலியல் தொல்லை; 2 எஸ்ஐ சஸ்பெண்ட்