1.8 டன் ரேஷன் அரிசி, கார் பறிமுதல்

 

கிருஷ்ணகிரி, செப். 11: குருபரப்பள்ளி அருகே கர்நாடகாவிற்கு கடத்த இருந்த 1.8 டன் ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் எஸ்.ஐ.திபாகர் மற்றும் போலீசார், குருபரப்பள்ளி- சின்னகொத்தூர் சாலையில் உள்ள நெடுசாலை கூட் ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 40 கிலோ எடை கொண்ட 45 பைகளில், 1.8 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அரிசியுடன், காரை பறிமுதல் செய்த போலீசார், அரிசியை கடத்தி வந்த அதே பகுதியில் உள்ள எட்ரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வேலாயுதம்(35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் குருபரப்பள்ளி, சோமநாதபுரம், குரும்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வீடு, வீடாக சென்று, குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்ய கர்நாடக மாநிலம் கேஜிஎப்புக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை