துப்புரவு ஆய்வாளர் வங்கி லாக்கரில் ரூ1.6 கோடி நகைகளை கைப்பற்றியது சிபிஐ

புதுடெல்லி: லஞ்சம் வாங்கிய போது பிடிபட்ட துப்புரவு ஆய்வாளர் வங்கி லாக்கரில் இருந்த ரூ1.60 மதிப்பிலான தங்க நகைகளை சிபிஐ கைப்பற்றியது.  சண்டிகாரை சேர்ந்தவர் சந்தர் மோகன். துப்புரவு தலைமை ஆய்வாளர். விபத்து காரணமாக அலுவலகத்திற்கு வர முடியாத ஒப்பந்த துப்புரவு ஆய்வாளரை பணியில் சேர்க்க சந்தர் மோகன் லஞ்சம் கேட்டார். இதை தொடர்ந்து ரூ1 லட்சம் லஞ்சம் வாங்கும் போது சிபிஐ அதிகாரிகளால் சந்தர் மோகன் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ​​சண்டிகரில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி லாக்கரில், சந்தர்மோகன் மற்றும் அவரது மனைவி பெயரில், உள்ள வங்கி லாக்கரை சிபிஐ அதிகாரிகள் திறந்து சோதனை நடத்தினர். அங்கு இருந்து ​​சுமார் 3,100 கிராம் எடையுள்ள தங்க நகைகள், தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டன. ரூ1.60 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் அங்கு இருந்து சிபிஐ கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி