கோபியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.60 கோடி மோசடி

*அரசு பள்ளி ஆசிரியைகள் 2 பேர் கைது

கோபி : ஏலச்சீட்டு நடத்தி 1.60 கோடி ரூபாய் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியைகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் கோபி நாகர்பாளையம் நஞ்சப்பா நகரை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மனைவி பிரபா (60). இவர் சிறுவலூர் அருகே உள்ள வண்ணாந்துறை புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இவரும் காளிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி கடந்த மே மாதம் ஓய்வு பெற்ற ஆசிரியை குளோரி, அவ்வையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் குடியரசி (55) ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களிடம் கோபி அருகே உள்ள கரட்டூர் கே.டி.எஸ் நகரை சேர்ந்த பழனிச்சாமி (57) உள்ளிட்ட பலரும் ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்துள்ளனர். ஏலச்சீட்டு தொகை மட்டுமின்றி பலரிடமும் கடனாகவும் பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏலச்சீட்டு தொகை மற்றும் கடனாக பெற்ற 1.60 கோடி ரூபாயை பழனிச்சாமி உள்ளிட்டோருக்கு திருப்பி தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பழனிச்சாமி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிந்த கோபி போலீசார் பிரபாவையும், குடியரசியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியை குளோரியை தேடி வருகின்றனர்.

Related posts

சென்னையில் 4 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க ஏற்பாடு..!!

மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு அறக்கட்டளை அலுவலகத்தை அரசியல் கட்சியினர் முற்றுகை: திருப்பூர் அருகே பரபரப்பு

மாநிலம் முழுவதும் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் : அமைச்சர் முத்துசாமி