1 மாதத்திற்கு மேல் குறையாத நீர்மட்டம்: அமராவதி அணையில் இருந்து உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றம்

உடுமலை: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அமராவதி அணை  தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக  அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே அணையில் இருந்து ஆற்றில்  வெளியேற்றப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ளது அமராவதி அணை.  மொத்தம் 90 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை மூலம் திருப்பூர், கரூர்  மாவட்டங்கைள சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெற்று  வருகிறது. இதே போல கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால்கள் மூலம் சுமார் 2  ஆயிரம் ஏக்கர் விளைநிலம் நேரடி பாசன வசதி பெற்று வருகிறது.அமராவதி  அணையின் நீர் பாசன வசதி மட்டுமின்றி, கரூர் வரையிலான அமராவதி ஆற்றின்  வழியோர கிராமங்களில் வசிக்கின்ற பொதுமக்களின் குடிநீர் தேவை, கால்நடைகளின்  குடிநீர் தேவை ஆகியவற்றையும் நிறைவேற்றி வருகிறது. 100க்கும் மேற்பட்ட  கிராமப்பகுதிகளில் கூட்டுகுடிநீராக தாகம் தணிக்கிறது. இந்த அணையில் 4.04  டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தற்போது 3.99 டிஎம்சிக்கு நீர்  இருப்பு உள்ளது‌. அணையின் நீர்மட்டம் 89 அடியை தாண்டி உள்ளது.அணையின்  நீர்பிடிப்பு பகுதிகளான வால்பாறை, கொடைக்கானல் மற்றும்  மறையூர், மூணாறு, தூவானம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக  அணைக்கு நீர்வரத்து கடந்த 10 நாட்களாக அதிகரித்தது. கடந்த 11ம் தேதி இரவு  அணைக்கு 1000 கன அடியை கடந்து நீர் வரத்து வந்தது. இதனை அடுத்து அணையில்  ஏற்கனவே 89.5 அடிக்கு நீர் தேக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு கருதி வரத்து  நீர் முழுவதும் அமராவதி ஆற்றில் உபரியாக திறந்து விடப்பட்டது‌. இதற்கிடையே இன்று காலை 8 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 89.18 அடிக்கு  நீர் மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1250 கன அடி தண்ணீர் வந்து  கொண்டிருந்தது. அணையில் இருந்து 1313 கன அடி தண்ணீர் உபரியாக ஆற்றில்  வெளியேற்றப்படுகிறது.அணை முழு கொள்ளளவில் தற்போது உள்ளது. அணையின்  நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைநீர் அணைக்கு ஆயிரம் அடிகளை கடந்து  வரத்து வந்து கொண்டிருப்பதால், வரும் நீர் முழுமையாக உபரியாக ஆற்றில்  வெளியேற்றப்படுகிறது. கடந்த மாதம் 15ம் தேதி அணையின் நீர்மட்டம் 87.23  அடியாக இருந்தது. அப்போது நீர்வரத்து 2442 கனஅடியாகவும், வெளியேற்றம் 2246  கனஅடியாகவும் இருந்தது. ஒரு மாதத்திற்கு மேலாக அணையின் நீர்மட்டம் முழு  கொள்ளளவுடன் காணப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக உபரி நீர்  ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில்  உள்ளனர்….

Related posts

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா