1 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழை சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம் பொன்னை சுற்றுப்புற பகுதிகளில்

பொன்னை, செப். 25: பொன்னை சுற்றுப்புறப் பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வேலூர் மாவட்டம் பொன்னை சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை வெயில் வாட்டி வதைத்தது. பின்னர் பகல் 12 மணியளவில் திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. இந்த கனமழையால் வாகன ஓட்டிகள் மற்றும் அத்தியாவசிய வேலைகளுக்கு சென்ற பெண்கள் உட்பட அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் குழந்தைகளுடன் சென்ற பெண்கள் உள்ளிட்டோர் திடீர் கனமழையால் சாலையோரங்களில் உள்ள பஸ் நிலையங்கள் மற்றும் மரத்தடியில் நின்று சென்றனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மழை வெள்ளம் விளை நிலங்களில் தேங்கியது. சாலைகளில் பெருக்கெடுத்த மழை வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

Related posts

வட்டார வள மையங்களில் பள்ளி மாணவர்களுக்கு புத்தக திருவிழா போட்டி

தூய்மை பணியாளர்களுக்கு கயத்தாறில் மருத்துவ முகாம்

தூத்துக்குடி சிதம்பரநகர் சாலையில் வரும் 29ல் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி