1 கோடி கொசுக்களை ஒழிப்பேன்: சுயேச்சை வேட்பாளர் நூதன பிரசாரம்

கரூர்: கரூரை சேர்ந்தர் ராஜேஷ் கண்ணன் (43). காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர், கரூர் மாநகராட்சி 26வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். வாக்காளர்களிடம் துண்டு பிரசுரத்தை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அந்த துண்டு பிரசுரத்தில், கரூர் மாநகராட்சியில் 10திட்டங்களை முன் வைத்துள்ளதாகவும், முதல் திட்டமாக 1 கோடி கொசுக்கள், 1 லட்சம் கரப்பான்பூச்சிகள், 10ஆயிரம் எலிகள், 100தெரு நாய்கள் ஆகியவற்றை ஒழிப்பது தான் தனது முதல் திட்டம் என துண்டு பிரசுரத்தில் தெரிவித்திருந்தார். இதில் 2வது திட்டத்துடன் இன்று சந்திப்பதாக வாக்காளர்களிடம் கூறி சென்றுள்ளார். இந்த நூதன பிரசாரம் வார்டு பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது….

Related posts

ஐதராபாத்தில் குழந்தைகளுக்கு தாமரை சின்னம்; தேர்தல் பிரசார விதிமீறிய வழக்கில் அமித்ஷா, கிஷன் ரெட்டி பெயர்கள் நீக்கம்

நாட்டுக்காக சாக தேவையில்லை வளர்ச்சிக்கு பணியாற்றுங்கள்: குஜராத் விழாவில் அமித் ஷா பேச்சு

ஒன்றிய பாஜ அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் திமுக உண்ணாவிரத போராட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு