ஊட்டியில் 0.8 டிகிரி

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக உறை பனிப்பொழிவின் தாக்கம் சற்று கடுமையாகவே உள்ளது. கடும் உறை பனி பொழிவால் அதிகாலை நேரங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தற்போது உறை பனியின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தேயிலை செடிகள் மற்றும் மலைக்காய்கறி செடிகளும் கருகி வருகின்றன. வனப்பகுதிகளில் உள்ள செடி, கொடிகளும் காய்ந்து வருகின்றன. ஊட்டி நகரில் 25ம் தேதி குறைந்தபட்ச வெப்பநிலை 2.5 டிகிரி செல்சியசாகவும், 26ம் தேதி 2.3 டிகிரி செல்சியஸ், 27ம் தேதி 2.5 டிகிரி செல்சியஸ், 28ம் தேதி குறைந்தபட்ச வெப்பநிலை 1.3 டிகிரி செல்சியஸ் என அதிகாலை வேளைகளில் வெப்பநிலை படிப்படியாக குறைந்து பதிவானது.

நேற்று அதிகபட்ச வெப்பநிலை 23.2 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி இருந்தது. அப்பர்பவானி, அவலாஞ்சி மற்றும் கோரகுந்தா, தலைக்குந்தா போன்ற பகுதிகளில் நேற்று 0 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் கீழாக வெப்பநிலை சென்றிருக்க வாய்ப்புள்ளது. ஊட்டியில் இன்று அல்லது நாளைக்குள் வெப்பநிலை 0 டிகிரிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடும் குளிரால் தொழிலாளர்கள் தீ மூட்டி குளிர் காய்கின்றனர்.

Related posts

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.5,858 கோடி நிதி: மகாராஷ்டிராவுக்கு ₹1,492 கோடி

இறுதிகட்டத்தில் 65% வாக்குப்பதிவு; காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்தது: வரும் 8ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

புல்டோசர் இடிப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; மதவழிபாட்டு தல ஆக்கிரமிப்புகளை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்