வைகுண்டம், புதுக்கோட்டை, பண்ணைவிளையில் கால்நடை மருத்துவமனை, மருந்தகங்களில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு

வைகுண்டம், ஜூன் 7: புதுக்கோட்டை, பண்ணைவிளை அரசு கால்நடை மருந்தகம், வைகுண்டம் கால்நடை மருத்துவமனை ஆகிய இடங்களில் மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: புதுக்கோட்டையில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்திற்கு விவசாயிகள் கொண்டுவரும் கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது. மருந்துகள் இருப்பு உள்ளிட்டவற்றையும் மருத்துவரிடம் கேட்டறிந்து தேவையான மருந்துகள் இருப்பதை உறுதி செய்தோம். அதேபோல் பண்ணைவிளை அரசு கால்நடை மருந்தகத்தையும், தொடர்ந்து வைகுண்டம் அரசு கால்நடை மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வைகுண்டம் கால்நடை மருத்துவமனையில் கட்டிடம் பழுதாகி உள்ளதாக தெரிவித்தனர். அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு உதவும் கால்நடைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கால்நடை மருத்துவர்களை கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் சண்முகையா எம்எல்ஏ, கால்நடைத்துறை இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், திமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரி சங்கர், முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, கொம்பையா, நகர செயலாளர் சுப்புராஜ், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகப்பெருமாள், தொண்டரணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதிகள் சண்முகசுந்தரம், முத்துராமலிங்கம், அருண் கிருஷ்ணன், இளைஞரணி காசி சண்முகம், ஐயப்பன் கால்நடைத்துறை மருத்துவர்கள் ஆனந்தராஜ், சுரேஷ், ஆய்வாளர் நாகூர் மீரான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்