மன்னராஜா சுவாமி தசரா குழுவின் 13ம் ஆண்டு காளி பூஜை

நாகர்கோவில், அக். 17 : அஞ்சுகிராமம் அருகே லெட்சுமிபுரம் மன்னராஜா சுவாமி தசரா குழு சார்பில் 13ம் ஆண்டு காளிபூஜை விழா நேற்று கோயில் வளாகத்தில் நடந்தது. இதையொட்டி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 8 மணிக்கு செண்டை மேளம், 9 மணிக்கு வில்லிசை ஆகியவை நடந்தது. பகல் 12 மணிக்கு  மன்னராஜா சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு சுவாமி மஞ்சள் நீராடுதல், 1 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடந்தது. மாலை 6 மணிக்கு செண்டை மேளம், இரவு 7 மணிக்கு வத்தல் யாகம், 8 மணிக்கு வில்லிசை, 12 மணிக்கு காளி அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ராஜேந்திரன், டாக்டர் அங்கயற்கண்ணி, ஷேக் சிக்கந்தர் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்