₹92 லட்சம் மதிப்பீட்டில் 25 பணிகள் மேற்கொள்ள தீர்மானம்

திருச்செங்கோடு, மே 13: திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. யூனியன் சேர்மன் சுஜாதா தங்கவேல் தலைமை வகித்தார். துணை தலைவர் ராஜபாண்டி ராஜவேல், கமிஷனர் மாதவன், பிடிஓ மேகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் அருள்செல்வி, செல்லப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்தும் உறுப்பினர்கள் மாதேஸ்வரி, திருநங்கை ரியா, கவிதா, சுதா, சாந்தி, குணசேகர், செல்வராஜ், ஜெகநாதன், சம்பூரணம், லட்சுமி, பிரியா ஆகியோர் பேசினர்.

மேலும், ஒன்றிய பொதுநிதி ₹92 லட்சம் மதிப்பில் 25 பயணிகள் செய்ய மன்றம் ஒப்புதல் அளித்தது. 15வது நிதிக்குழு மானியத்தில் சுகாதாரப் பணிகள், குடிநீர் பணிகள் உள்ளிட்ட 5 பணிகள் ₹27 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. மொத்தம் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்து. யூனியன் சேர்மன் சுஜாதா தங்கவேல், கமிஷனர் மாதவன் உள்ளிட்டோர் கொண்ட வேளாண் உற்பத்திக்குழு, கல்வி்குழு, பொது நோக்கங்கள் குழு, நியமனக்குழு ஆகியவை அமைக்கப்பட்டன. கூட்டத்தில் வட்டார பொறியாளர்கள் அருண், சுமதி, உதவி்க்கல்வி அலுவலர் தமிழ்செல்வன், வேளாண் உதவி அலுவலர் ரமேஷ் பிரபாகர், குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் வித்யாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்