₹7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

இடைப்பாடி, ஜூன் 2: இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் சனி சந்தை நேற்று கூடியது. இதில் சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் 13ஆயிரம் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் இறைச்சிக்கடைக்காரர்கள் ஆடுகளை வாங்க குவிந்ந்தனர். இதனால் சந்தை களைகட்டியது. 10 கிலோ எடையுள்ள ஆடு ₹5,400 முதல் ₹7,000 வரையும், 20 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு ₹10,700 முதல் ₹14,000 வரையும், 30 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு ₹16,000 முதல் ₹21,000 வரையும் விலை போனது. வளர்ப்பு குட்டி ஆடு ₹2,000 முதல் ₹5,000 வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் 86 கிலோ கொண்ட போயர் இனத்தை சேர்ந்த ஆடு ₹50 ஆயிரத்துக்கு விற்பனையானது. இவை தவிர, பந்தய சேவல், கோழிகள், காய்கறிகள், பலாப்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். சந்தையில் நேற்று ₹7 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு