₹60 ஆயிரம் வெள்ளி பொருட்கள் திருட்டு

தர்மபுரி, செப்.26:அரூர் மோப்பிரிப்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல்(45). இவர் ஓசூரில் தங்கி இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், அரூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மகளின் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த 2 குத்துவிளக்குகள், 2 காமாட்சி விளக்குகள், வெள்ளி டம்ளர், வெள்ளி குங்கும சிமிழ் என மொத்தம் ₹60 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இதுபற்றி அவர் அளித்த புகாரின் பேரில், அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்