₹5லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

தேன்கனிக்கோட்டை, ஜூலை 13: தளி அருகே மத்கூர் கிராமத்தில் ₹5லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பிரகாஷ் எம்எல்ஏ பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தளி அருகே மத்கூர் கிராமத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க சஞ்சீவினி புளுமெட்டல் தொழிற்சாலை சிஎஸ்ஆர் நிதியில் ₹5லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ ரிப்பன் வெட்டி, பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு தளி ஊராட்சி குழு தலைவர் சீனிவாசலுரெட்டி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மஞ்சுநாத், ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ், மதகொண்டப்பள்ளி ஊராட்சி தலைவர் மாலதி சந்துரு, துணை தலைவர் ராஜூ, திமுக பிரமுகர்கள் வேணு, மல்லி, பாபு மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்