₹49.54 லட்சம் உண்டியல் காணிக்கை 542 கிராம் தங்கம், 931 கிராம் வெள்ளியும் கிடைத்தது படவேடு ரேணுகாம்பாள் கோயிலில்

கண்ணமங்கலம், பிப்.9: படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் ₹49.54 லட்சத்தை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும், 542 கிராம் தங்கம், 931 கிராம் வெள்ளியும் கிடைத்தது. திருவண்ணாமலை மாவட்டம், படவேட்டில் உலக பிரசித்தி பெற்ற ரேணுகாம்பாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருடம் முழுவதும் பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம். அப்போது வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம். இதன்படி நேற்று முன்தினம் திருவண்ணாமலை மண்டல துணை கமிஷனர் சிவலிங்கம் தலைமையில் கோயில் செயல் அலுவலர் சங்கர், போளூர் சரக ஆய்வாளர் நடராஜன், கோயில் கண்காணிப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி ேநரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது. முடிவில் ₹49.54 லட்சம், 542 கிராம் தங்கம், 931 கிராம் வெள்ளி பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அவற்றை இந்தியன் வங்கி மேலாளர் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டு வங்கி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியில் கோயில் மேலாளர்கள் மகாதேவன், சீனிவாசன், அலுவலக எழுத்தாளர்கள் மோகன், சிவகுமார், பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை