ஆந்திராவில் நள்ளிரவில் வங்கி ஏடிஎம் மையத்தில் ₹18.41 லட்சம் கொள்ளை

*காஸ் கட்டர் மூலம் ஆசாமிகள் கைவரிசை

திருமலை : ஆந்திராவில் நள்ளிரவில் வங்கி ஏடிஎம் மையத்தில் கேஸ் கட்டர் கொண்டு ₹18.41 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் – பெல்லாரி மெயின் ரோட்டில் கூடேருவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் ஏ.டி.எம். மையத்தில் சென்று காஸ் கட்டர் கொண்டு ெமஷினில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இந்த நிலையில் மின்கசிவு ஏற்பட்டு மெஷினின் மேல்பகுதி லேசாக எரிந்தது.

அப்போது, சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்தபோது ஏடிஎம் மையத்தில் இருந்து சிலர் உடனடியாக காரில் ஏறி தப்பி சென்றனர். ஏடிஎம் மையத்தில் இருந்து புகை வருவதை பார்த்து அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் ஏடிஎம் மையத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சிவராம் மற்றும் போலீசார் ஆய்வு செய்ததில், பணம் திருட்டு போனது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, வங்கி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து தகவல்களை தலைமை அலுவலகத்தில் இருந்து சேகரிக்கப்பட்டதில் ₹18 லட்சத்து 41 ஆயிரத்து 300 திருட்டு போனதாக வங்கி அதிகாரிகள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் கைது: மாயாவதி கண்டனம்

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்