₹17.50 லட்சம் மதிப்பீட்டில் திறந்த வெளி கிணறு எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார் கலசபாக்கம் அருகே குடிநீர் பிரச்னையை போக்க

கலசபாக்கம், ஆக. 17: கலசபாக்கம் அருகே குடிநீர் பிரச்னையை போக்க ₹17.50 லட்சம் மதிப்பீட்டில் திறந்த வெளி கிணறு அமைக்கும் பணியை எம்எல்ஏ அடிக்கல்நாட்டி தொடங்கி வைத்தார். கலசபாக்கம் ஒன்றியம் கோயில் மாதிமங்கலம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிய திறந்த வெளி கிணறு அமைத்திட பூமி பூஜை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட கவுன்சிலர் க.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் அ.சிவக்குமார், மாவட்ட கவுன்சிலர் பட்டம்மாள் முனுசாமி, அறங்காவல் குழு உறுப்பினர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ பெ.சு.தி சரவணன் கலந்துகொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ₹17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய திறந்தவெளி கிணறு அமைக்கும் பணியை தொடங்கி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நீண்ட நாள் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் வித்யா, பிரசன்னா ஊராட்சித் தலைவர் பத்மாவதி, பன்னீர்செல்வம் பிடிஓ வேலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி