₹15 லட்சம் மோசடி செய்த சென்னை பெண் அதிகாரி வேலூர் எஸ்பியிடம் பாதிக்கப்பட்டவர் புகார் போலி பணி நியமன ஆணை வழங்கி

வேலூர், செப்.7: போலி பணி நியமன ஆணை வழங்கி ₹15 லட்சம் மோசடி செய்ததாக சென்னை பெண் அதிகாரி மீது வேலூர் எஸ்பியிடம் பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின்பேரில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ேவலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. எஸ்பி மணிவண்ணன், ஏடிஎஸ்பி பாஸ்கரன் ஆகிேயார் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். இதில் வேலூரை சேர்ந்த வினோத் கண்ணா என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியை சேர்ந்த சரோஜினி என்பவர், எனது உறவினர் மூலம் எனக்கு அறிமுகம் ஆனார். இவர் சென்னை மருத்துவத்துறையில் அரசு மருத்துவ ஆய்வாளராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் ‘தலைமை அலுவலகத்தில் இணை செயலாளர் எனக்கு நன்றாக தெரியும். மாநிலம் முழுவதும் மருத்துவத்துறையில் பல்வேறு இடங்களில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணியிடங்களுக்கு ஏற்ப நபர் ஒருவருக்கு ₹3.50 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை செலவாகும்’ என்று தெரிவித்தார்.

இதை நம்பி நானும், எனக்கு தெரிந்த நபர்களுக்கு தெரிவித்தேன். மொத்தம் 4 பேர் அளித்த ₹15 லட்சத்து 80 ஆயிரத்தை பல்வேறு தவணையாக சரோஜினி வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தேன். பணத்தை பெற்றுக்கொண்ட அவர் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும் வேலூர் சுகாதாரத்துறை இணை இயக்குனரின் கையெப்பமிட்டுள்ள அடையாள அட்டை வழங்கினார். இந்த ஆணையை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் காண்பித்தபோது, பணிநியமன ஆணை மற்றும் அடையாள அட்ைட போலியானவை என்றும், மோசடியாக தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். எனவே சரோஜினி மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த நபர்கள் மீதும் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ₹15.80 லட்சத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்