₹1.25 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

மல்லசமுத்திரம், ஜன.19: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 60 மூட்டை பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் பி.டி. ரகம் பருத்தி குவிண்டால் ₹6,080 முதல் ₹7,280 வரையிலும், கொட்டு ரகம் பருத்தி குவிண்டால் ₹3,900 முதல் ₹5,100 வரையிலும் ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி, ₹1.25 லட்சத்திற்கு விற்பனையானது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு