ெகாடைரோடு ராஜதானிக்கோட்டையில் சுயம்பு முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழா ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

நிலக்கோட்டை: நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே ராஜதானிக்கோட்டையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த சுயம்பு முத்தாலம்மன், காளியம்மன், பகவதியம்மன், அரண்மனை கருப்புசாமி கோயில் அமைந்துள்ளது. இவ்வூரின் காவல் தெய்வங்களாக கருதப்படும் இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்டி இந்த ஆண்டு இக்கோயில் பங்குனி திருவிழா கடந்த 3 நாட்களாக சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம், மாவிளக்கு, பொங்கல் என பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர். நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து மாலையில் தாரை தப்பட்டைகள் முழங்க பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து பூஞ்சோலை சென்றடைந்தனர். இதில் அம்மையநாயக்கனூர் திமுக பேரூர் செயலாளர் விஜயகுமார், நிர்வாகிகள் ஆறுமுகம், மூர்த்தி, சதீஷ் மற்றும் ஆயிரக்கண்கான பக்தர்கள் கலந்து ெகாண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம கமிட்டியினர், ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து