ஹைவேவிஸ் மலைப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டு மாடுகள்: சுற்றுலா பயணிகள் அச்சம்

சின்னமனூர்: சின்னமனூர் அருகே ஹைவேவிஸ்மலை கிராம பகுதிகளில் காட்டு மாடுகள் சுற்றி திரிவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.சின்னமனூர் அருகே 53வது கிலோ மீட்டரில் மேகமலை துவங்கி மணலாறு கடந்து ஏழாவது மலை கிராமமான இரவங்கலாரில் நிறைவடையும் ஹைவேவிஸ் பேரூராட்சியாக உள்ளது. இங்கு அடர்ந்த வனப்பகுதிகள் இருப்பதால் அதிக அளவில் விலங்கினங்கள் காணப்படுகின்றன. இதனால் இப்பகுதி மேகமலை வன உயிரினச் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இங்கு கூட்டம் கூட்டமாக யானைகள், காட்டு மாடுகள், சிறுத்தை, வரிப்புலிகள், கரடிகள், மலைப்பாம்புகள், செந்நாய்கள், காட்டுகோழிகள், கருஞ்சிறுத்தை, மான்கள், சிங்க வால் குரங்குகள் என பலதரப்பட்ட உயிரினங்கள் உள்ளன.இப்பகுதியில் சர்வ சாதாரணமாக யானைக் கூட்டங்களும், காட்டு மாடுகளும், வீட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், அணைகளுக்குள்ளும், தேயிலைத் தோட்ட பகுதிகளுக்குள்ளும் நுழைந்து இரை தேடிச் செல்லும. அத்துடன் அப்பகுதிகளில் வேலை செய்து கொண்டிருக்கும் தொழிலாளர்கள் திடீரென வருகின்ற யானை மற்றும் காட்டுமாடுகளை கண்டவுடன் தப்பித்து ஓடுவது தொடர்கதையாக உள்ளது. இருந்தபோதிலும் கடந்த ஆண்டுகளில் பல தொழிலாளர்களை சாலையை கடக்கும் யானைகள் அடித்து கொன்றுள்ளன.இந்நிலையில் நேற்று ஹைவேவிஸ் மலைச்சாலையிலிருந்து மணலார் செல்லும் பகுதிக்கு இடையே இபி கேம்ப் அருகில் காட்டு மாடுகள் அதிக எண்ணிக்கையில் சுற்றி வருகின்றன. அச்சாலையில் காரில் சென்ற ஒருவர் அந்தக் காட்டு மாடுகள் சுற்றித்திரிவதை தன் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்கள் வாயிலாக பலருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த காட்டு மாடுகள் தற்போது மலை கிராமங்களிலும், சாலைகளிலும் தன்னந்தனியாகவும், கூட்டமாகவும் திரிந்து வருவதால் தொழிலாளர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே சின்னமனூர் வனத்துறையினர் அதிகளவில் ஊருக்குள் வரும் வன விலங்குகளை வனத்திற்குள் விரட்டி விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏழுமலை மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி