ஹெல்த்தி ஜூஸ்…

நன்றி குங்குமம் டாக்டர் கோடை கொளுத்திக் கொண்டிருக்கிறது. எப்படியிருந்தாலும் ஏதேனும் குளிர்பானங்களைத் தேடி நம் நாக்கு தவிக்கத்தான்போகிறது. கண்டகண்ட குளிர்பானங்களை குடிப்பதைவிட, உடலுக்கு நலம் தரும் சில ஜூஸ் வகைகளை முயற்சித்துப் பாருங்களேன்…முருங்கைக்கீரை ஜூஸ்தேவையானவை: முருங்கைக்கீரை – 1 கப், மிளகு – 5, சீரகம், – 1 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன், இந்துப்பு, பனங்கற்கண்டு – தேவையான அளவு.செய்முறை: முருங்கைக் கீரையுடன் மிளகு சீரகம், எலுமிச்சைச்சாறு சேர்த்து மிக்ஸியில் அடித்து, வடிகட்ட வேண்டும். பிறகு, இந்துப்பு, பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். பனங்கற்கண்டுக்குப் பதிலாகத் தேனையும் பயன்படுத்தலாம்.செம்பருத்தி ஜூஸ்தேவையானவை: செம்பருத்திப்பூ – 4, பன்னீர் ரோஜா 2, பனங்கற்கண்டு அல்லது தேன்  சிறிதளவு, எலுமிச்சைச் சாறு அல்லது இளநீர் – 1 கப்.செய்முறை: செம்பருத்தி, ரோஜா இதழ்களை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் கலக்கி ஆறவிடவும். பிறகு எலுமிச்சைச் சாறு அல்லது இளநீர் சேர்த்துக் கலந்து பருகலாம். கீழாநெல்லி ஜூஸ்தேவையானவை: கீழாநெல்லி இலை – 1 கைப்பிடி, கொத்தமல்லித் தழை, பனை வெல்லம்  சிறிது, எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன், இந்து உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்ட வேண்டும். பிறகு தேவையான அளவு நீர் சேர்த்துப் பருகலாம்.

வாழைத்தண்டு – வெள்ளரி ஜூஸ்தேவையானவை: வாழைத்தண்டு (பொடியாக நறுக்கியது) 1 கப், வெள்ளரித் துண்டுகள் ½ கப், எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன், பனங்கற்கண்டு- தேவையான அளவு.செய்முறை: அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். பிறகு, வடிகட்டிப் பருகலாம். பனங்கற்கண்டுக்குப் பதிலாக தேனும் பயன்படுத்தலாம்.– என்.யுவதி

Related posts

கருப்பட்டியின் மருத்துவ குணங்கள்!

நலம் தரும் நவதானியங்கள்!

நோயை விரட்டும் கண்டங்கத்தரி