ஹெலிகாப்டர் விபத்தின் போது அரசு துறைகளை முடுக்கி விட்டு மீட்பு பணிகளுக்கு உதவிய முதல்வருக்கு திமுகவினர் நன்றி தெரிவித்து தீர்மானம்

ஊட்டி :  நீலகிரி மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் ஊட்டியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அவை தலைவர் பில்லன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முபாரக் வரவேற்றார். வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிகுமார், தமிழ்செல்வன், விஜயா மணிகண்டன், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, பாண்டியராஜ், திராவிடமணி, செந்தில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பொன்தோஸ், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 பேரூராட்சிகள், 11 பேரூராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து நகர்ப்புற அமைப்புகளில் உள்ள வார்டுகளுக்கும் பூத் உறுப்பினர்களை நியமித்து, 31ம் தேதிக்குள் தலைமை கழகத்திற்கு அனுப்ப வேண்டும். எனவே நகராட்சிகளில் உள்ள மொத்தம் 108 வார்டுகள், பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 186 வார்டுகளுக்கும் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிப்பது, இதற்கான விவரங்களை 27ம் தேதிக்குள் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது.ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய தொகுதிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை புதிய கழக உறுப்பினர்களாக மார்ச் 1ம் தேதிக்குள் சேர்ப்பது, நீலகிரி மாவட்டத்தில் பேராசிரியர் அன்பழகனின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் கொடியேற்றியும், பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கியும் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடுவது என தீர்மானிக்கப்படுகிறது. இதனை 21ம் தேதி(இன்று) நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைக்கிறார். கூடலூர் தொகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை தடுக்கும் நோக்கில் செயல்டும் அதிமுகவினருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டவுடன், அரசு நிர்வாகத்தை முடுக்கிவிட்டு, தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டதுடன், வெலிங்டனில் ராணுவ உயர் அதிகாரிகளுடன் சம்பவம் குறித்து கேட்டறிந்தும், உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டானுக்கு நீலகிரி மாவட்ட திமுக., சார்பில் நன்றி. என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் லியாகத் அலி, தொரை, பரமசிவன், நெல்லை கண்ணன், ராஜேந்திரன், சிவானந்தராஜா, பிரேம்குமார், உதயதேவன், சுஜேஷ், நகர செயலாளர்கள் ராமசாமி, ஜார்ஜ், காசிலிங்கம், ராஜேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துசாமி, சதக்கத்துல்லா, லாரன்ஸ், வெங்கடேஷ், மோகன்குமார், சீனி, செல்வம், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், ஜெயகுமாரி, எல்கில்ரவி, தேவராஜ், யோகேஸ்வரன், சின்னவர், செல்வராஜ், காந்தாமணி, பவீஷ், பேரூர் கழக செயலாளர்கள் பிரகாஷ்குமார், உதயகுமார், பாபு, நடராஜன், முத்து, மாதேவ், கிருஷ்ணகுமார், ரமேஷ்குமார், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் உமாராஜன், பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் ராம்குமார், மாதன்(எ)மாயன், தொமுச தோட்ட தொழிலாளர் பொதுச்செயலாளர் செல்வராஜ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சேகரன், நாகராஜ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகநாத்ராவ், மத்தீன், சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்….

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு