ஹாட்ரிக் கோலுடன் ரொனால்டோ புதிய சாதனை

மான்செஸ்டர்: ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நேற்று நடந்த போட்டியில் போர்ச்சுக்கல்லை சேர்ந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெற்றுள்ள மான்செஸ்டர்  யுனைடெட் அணி – டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் எஃப்.சி. அணியுடன் மோதியது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் அணி வெற்றி பெற்றது.  கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது அணிக்காக (12, 38, 81 நிடங்களில்) ஹாட்ரிக் கோல் அடித்தார். கிளப் போட்டிகளில் இது அவருக்கு 49வது ஹாட்ரிக் கோல் ஆகும்.  கிளப் போட்டிகள், நாட்டிற்காக என அவர் மொத்தம் 807 கோல்கள் அடித்து, தொழில்முறை கால்பந்து வரலாற்றில் செக்குடியரசின்ஜோசப் பிகானை(805கோல்) முந்தியுள்ளார். கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்….

Related posts

இந்திய அணி விளையாடிய விதம் உண்மையிலேயே இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள்தான்: ஜாஸ் பட்லர்!

டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி

யுரோ கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்று நாளை ஆரம்பம்: நாக் அவுட் சுற்று ஆட்டங்கள்