ஹர்திக் 87 ரன் குவிப்பு ராஜஸ்தானுக்கு வெற்றி இலக்கு 193

மும்பை: ஆரம்பத்தில் விக்கெட் மளமளவென விழுந்த நிலையில், குஜராத் அணி 100 ரன்னை எட்டுமா என்று எண்ணத் தோன்றியது. ஆனால், ஹர்திக், மனோகர், மில்லர் அதிரடியால் அந்த அணியால் அந்த அணி 192 குவித்தது. மும்பை டி.ஒய். ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 24 ஐபிஎல் மேட்சில் ராஜஸ்தான் ராயல்ஸ்-குஜராத் டைடன்ஸ் மோதியது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. குஜராத் சார்பில் மேத்யூ வாடே முதல் ஓவரில் 12 ரன் (6 பந்து, 3 பவுண்டரி) எடுத்து, அடுத்த ஓவரில் ரன் அவுட் ஆனார். இவரை தொடர்ந்து விஜயசங்கர் களம் இறங்கி, அவர் சென் பந்தில் 2 ரன் (7 பந்து) எடுத்து விக்கெட் கீப்பர் சாம்சனிடம் கேட்ச் கொடுத்தார். 4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து குஜராத் தத்தளித்து. உடனே அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார். அவர் சென் பந்தில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து அசத்தினர். மறு முனையில் ஓப்பனரான கில் மெதுவான தொடக்கத்தை தந்தார். 7வது ஓவரை வீச ரியான் பராக்கை அழைத்தார் சாம்சன். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. அவரது முதல் ஓவரின் 3வது பந்தில் பவுண்டரி அடித்த நிலையில், 4 பந்தில் சுப்மன்கில் 13 ரன்(14 பந்து, 2 பவுண்டரி) எடுத்து ஹெட்மயரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன் பிறகு ஹர்திக் பாண்யா-அபினவ் மனோகர் ஜோடி சேர்ந்தது. இந்த ஜோடியை பிரிக்க சாம்சன் 6 பவுலர்களை பயன்படுத்தினார். இறுதியில் சாஹல் பந்தில் சிக்சர் அடித்த மனோகர் 43 ரன் (28 பந்து, 2 சிக்சர், 4 பவுண்டரி) கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்து கொண்டிருந்தாலும் கேப்டன் பொறுப்பை சுமந்துள்ள ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் டேவிட் மில்லர் இணைந்து ஆடத் தொடங்கினார். 19வது ஓவரை சந்தித்த மில்லர், சென் வீசிய அந்த ஒரு ஓவரில் 1 சிக்சர், 3 பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் 21 ரன்கள் எடுக்கப்பட்டது. 20வது ஓவரை கிருஷ்ணா வீச வந்தார். அந்த ஓவரில் மட்டும் ஒரு சிக்சர், 1 பவுண்டரி உள்பட 13 ரன் குஜராத் அணிக்கு கிடைத்தது. 74 ரன் (47 பந்து, 3 சிக்சர், 7 பவுண்டரி). இறுதிவரை களத்தில் நின்ற ஹர்திக் 87 ரன்( 52 பந்து, 4 சிக்சர்,8 பவுண்டரி) எடுத்தார். கடைசி பந்தில் பவுண்டரி அடித்தது குறிப்பிடத்தக்கது. 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்தது. இதையடுத்து 193 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களம் இறங்கியது. …

Related posts

நவம்பரில் என்னை அழைத்ததற்கு நன்றி ரோஹித் : ராகுல் டிராவிட்

பெரில் புயல் காரணமாக விமான நிலையம் மூடல்: பார்படாஸில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து தவிப்பு

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக சிக்கந்தர் ராசா நியமனம்