ஸ்ரீரங்கம் எம்எல்ஏவாக இருந்த முன்னாள் முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களை செயல்படுத்தவில்லை: திமுக எம்எல்ஏ பேச்சால் காரசார வாக்குவாதம்

சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாத்தில் கலந்துகொண்டு ரங்கம் பழனியாண்டி (திமுக) பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அங்கு பல திட்டங்களைக் கொண்டு வருவதாக அவை விதி 110ன் கீழ் அறிவித்தார். பல திட்டங்களை அறிவித்துவிட்டு அவற்றை செய்து தரவில்லை. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்: அவர் கன்னிப் பேச்சு என்று கூறியதால் அதில் தலையிடவில்லை. ஆனால் கண்ணியமில்லாததாக பேசியதால் குறுக்கிட வேண்டியதுள்ளது. 2011-21ம் ஆண்டு வரை, அதிமுக ஆட்சியில் 1,704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில் 1,167 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டன. 491 திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 20 அறிவிப்புகளில் அரசாணைகள் போடப்பட்டுள்ளன. எனவே பொத்தாம் பொதுவாக 50 திட்டங்கள் கைவிடப்பட்டன என்று பழனியாண்டி கூறுவதை ஏற்க முடியாது.அமைச்சர் எ.வ.வேலு:  ரங்கம் தொகுதிக்காக அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்படாத திட்டங்களை அவர் கோரிக்கையாக கூறுகிறார். அவர் சொல்வதையெல்லாம் நாங்கள் செய்து முடிக்கலாமே என்று அமைச்சர்களும் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறோம். அவர் கண்ணியத்துடன்தான் பேசுகிறார்.  முன்னதாக, பழனியாண்டி தனது பேச்சில் முன்னாள் முதல்வர் என்று கூறாமல் அவரது பெயரைக் கூறினார். எனவே இதற்கு அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். உடனே அவர் குறிப்பிட்ட பெயரை அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகர் மு.அப்பாவு நீக்கினார். இந்த விவாதத்தால் பேரவையில் சிறிது நேரம் திமுக- அதிமுக உறுப்பினர்களிடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்