ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் செயற்குழு கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமமூர்த்தி வரவேற்றார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் குண்ணம் முருகன், ஜார்ஜ், மாவட்ட பிரதிநிதிகள் கணேஷ்பாபு, சர்தார் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1ம் தேதி, நலதிட்ட உதவிகள் வழங்குவது, பொதுக்கூட்டம் மற்றும் மருத்துவ முகாம் நடத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் மோகனன், துணை செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் பரமசிவம், நிர்வாகிகள் பால்நல்லூர் நேரு, எறையூர் சரவணன், கிளாய் மோகன், தேவபிரசாத், அமுல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். …
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்
previous post