ஸ்ரீநிகேதன் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் அப்துல் கலாம் வருகை புரிந்து 10ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பள்ளி தாளாளர் ப.விஷ்ணு சரண், இயக்குனர் பரணிதரன் உத்தரவின்படி, பிறவியிலேயே கை, கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு பள்ளி முதல்வர் ஸ்டெல்லா ஜோசப் தலைமை தாங்கினார். துணை முதல்வர் கவிதா கந்தசாமி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ஷாலினி வரவேற்றார்.

முகாமை, ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சமூக நலத்துறை, பெடரல் மறுவாழ்வு மைய நிர்வாக மேலாளர் லட்சுமி, “காருண்யா” கார்த்திக், அன்பு சாய் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ஜெயவேல் நடத்தினர். இதில், திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, அம்பத்தூர், ஆவடி போன்ற பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு மருத்துவ உதவி பெற்றனர்.

முகாமில் சவீதா மருத்துவ மைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்துகொண்டனர். மேலும், 2023ம் கல்வி ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற ஸ்ரீ நிகேதன் பள்ளியின் முதன்மை தமிழ்ஆசிரியர் திருக்குறள் செம்மல் க.செந்தில்குமாருக்கு, மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் பள்ளி முதல்வர் ஸ்டெல்லா ஜோசப் நினைவு பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கினார். முடிவில் தலைமை ஆசிரியர் சுஜாதா நன்றி கூறினர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு