ஸ்பை ருலினா பிரபலமாகும் சப்ளிமெண்ட்

* கடந்த 1965-ம் ஆண்டு ஆப்ரிக்காவில் கடுமையான உணவு மற்றும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. அதன் காரணமாக, அந்நாட்டு மக்கள் சோமாலிய மக்களைப்போல் எலும்பும்தோலுமாக காட்சி அளித்தனர். அதே வேளையில், சார்டு(மடகாஸ்கர் தீவு) என்ற பகுதியில் வசித்து வந்த மக்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல், முழு ஆரோக்கியத்துடன் காணப்பட்டனர். இந்த மருத்துவ அதிசயத்தைக் கேள்விப்பட்ட பெல்ஜிய நாட்டு மருத்துவக் குழுவினர், அம்மக்களின் உடல்நலம் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டனர். அவற்றின் முடிவில், அவர்கள் குடித்த தண்ணீரில், கடல் பாசி பெருமளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுதான் ஸ்பைருலினா (Spirulina).* உலகில் 25 ஆயிரம் வகையான பாசிகள்; கண்டறியப்பட்டுள்ளது. அதில், 75 வகையான பாசிகள் மட்டுமே உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில், கடற்பாசி என்று குறிப்பிடப்படுகிற ஸ்பைருலினா முதல் இடம் பிடிக்கிறது. * ஸ்பைருலினாவின் அருமையை உணர்ந்த நவீன உலகம்தற்போது பெருமளவில் சப்ளிமெண்டாகப் பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக, கடந்த 20 ஆண்டுகளில் ஸ்பைருலினா உலகின் அதிகம் பயன்படுத்தும் சப்ளிமெண்டுகளில் முக்கியமானதாக மாறியுள்ளது.* தாய்ப்பால் அதிகளவில் சுரக்க வைக்க உதவுகிற மக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஸ்பைருலினாவில் ஏராளமாக காணப்படுகிறது. * நமது உடல் இயக்கங்களை சீராக வைக்கவும், நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க செய்யவும் ஸ்பைருலினா பயன்படுகிறது. மேலும், இதில் பச்சையம் ஏராளமாக இருக்கிறது. அதனால், உடலில் காணப்படுகிற நச்சுப்பொருட்கள் வெளியேற்றப்பட்டு உடல் முழுவதும் தூய்மைப்படுத்தப்படுகிறது.* ஸ்பைருலினாவில் இரும்புச்சத்து 13 சதவீதம் உள்ளது.; எனவே, ரத்தசோகை ஏற்படுவதைத் தடுத்து, நம்மைப் புத்துணர்வுடன் செயல்பட வைக்கிறது.* ஸ்பைருலினாவில் உள்ள பி வைட்டமின், சர்க்கரை நோயாளிகளின் கணையத்தை நன்றாக இயங்க வைக்கிறது. அதன் காரணமாக, தேவைப்படும் அளவுஇன்சுலின் சுரந்து, ரத்தத்தில் காணப்படுகிற குளுக்கோஸ் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.* நமது உடலில் செயல் திறன் இழந்த செல்களை, உயிர்ப்பிக்கும் ஆற்றல் ஸ்பைருலினாவுக்கு இருக்கிறது. * நம் சருமத்தில் ஏற்படுகிற சுருக்கங்களை முழுவதுமாக அகற்றும் ஸ்பைருலினா இளமைத் தோற்றத்தைத் தருகிறது. * கேரட்டில் காணப்படுவதைவிட பீட்டா கரோட்டின் சத்து இதில் 10 மடங்கு அதிகம் உள்ளது. * அன்றாட உணவில் ஸ்பைருலினாவை கணிசமான அளவில் சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கப்பட்டு, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.* பெரும்பாலும் துணை உணவாகப் பயன்படுத்தப்படும் சுருள் பாசியில் காணப்படுகிற புரதம் எளிதில் செரிக்கும் தன்மை கொண்டது. கோடைகாலத்தில் அதிகரிக்கும் உடல் சூட்டைத் தணிக்கும் வல்லமை இதற்கு உண்டு.* விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் வீரர், வீராங்கனைகளும் தங்களுடன் உணவாக இந்த தாவரத்தை எடுத்துச் செல்கின்றனர். * மற்ற சப்ளிமெண்டுகளைப் போலவே ஸ்பைருலினாவுக்கும் பக்கவிளைவுகள் உண்டு. எனவே, மருத்துவ ஆலோசனை இல்லாமல் உட்கொள்ளக் கூடாது.

Related posts

படிகாரத்தின் மருத்துவ குணங்கள்

கண் நோய்களை குணமாக்கும் அவரைக்காய்!

எடையும் குடைமிளகாயும்!