ஸ்பெஷல் மசாலா முட்டை

செய்முறை:

முட்டை நான்கு எடுத்துக்கொண்டு நான்கையும் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயத்தையும் மிளகாயையும் சிறிய துண்டுகளாக சதுரம், சதுரமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பில்லை போட்டு நன்கு தாளிக்கவும். பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அதே வாணலியில் மிளகுத் தூள், தனியாத் தூள், மிளகாய்த் தூள், முட்டை என எல்லாவற்றையும் சேர்த்து தேவைக்கு தகுந்தபடி உப்பு சேர்த்துக் கிளறவும். முட்டை மசாலாவுடன் சேர்ந்து வந்ததும் இறக்கி விடலாம். இப்போது முட்டை மசாலா ரெடி….

Related posts

பன்னீர் அல்வா

முட்டை இட்லி உப்புமா

செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி