ஸ்டான்லி மருத்துவ கல்லூரி வருகை பதிவு விவகாரம் கல்லூரியின் வருகைப்பதிவேட்டில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை: விசாரணை குழு தகவல்

சென்னை:  ஸ்டான்லி  அரசு மருத்துவக் கல்லூரி வருகை பதிவேட்டில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என விசாரணை குழு தெரிவித்துள்ளது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், பெண் மருத்துவர்  ஒருவர், ஒரே நேரத்தில் 10 நாட்களுக்கு  தேவையான கையெழுத்தை வருகை பதிவேட்டில் பதிவு செய்யும்  வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து மருத்துவமனை வருகை பதிவேட்டில் முறைகேடு நடந்து வருவதாக பல்வேறு தரப்பில் இருந்து  குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் இந்த வீடியோ பதிவு குறித்து விசாரணை நடத்த மருத்துவ நிலைய அதிகாரி (ஆர்.எம்.ஓ.) தலைமையில் 8 துறை தலைவர், ஒரு பேராசிரியர் என 10 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்த ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன் பாலாஜி உத்தரவிட்டார். இதையடுத்து அந்த குழு வீடியோவில் இருக்கும் டாக்டர் குறித்து நேற்று ஸ்டான்லி அரசு மருத்துவமனை கவுன்சில் ஹாலில் வைத்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணை முடிவில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில் இருப்பது  மருத்துவர் பி.சரஸ்வதி, முதுகலை மருத்துவ படிப்பில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவராக கடந்த மார்ச் மாதம் 29ம்தேதியில் சேர்ந்தார். மருத்துவர்  பி.சரஸ்வதி இந்த துறையில் சேர்ந்ததில் இருந்து அங்கு பராமரிக்கப்படும் வருகைப்பதிவேட்டில் கையொப்பமிட்டு வருகிறார். இந்த வருகை பதிவேடு அத்துறை தலைவர் கட்டுப்பாட்டில் உள்ளது. கல்லூரி அலுவலகத்தில் பராமரிக்கப்படும் வருகைப்பதிவேடு முதுநிலை கலந்தாய்வு இறுதிச்சுற்று முடிவடைந்த நிலையில் மாணவர்களின் கையொப்பத்துக்காக திறக்கப்பட்டது. மேற்கண்ட மாணவி இந்த பதிவேட்டில் கையெழுத்திடும் போது மருத்துவமனை ஊழியர் ஒருவர் அவர் கையொப்பமிட்டதை வீடியோ பதிவு எடுப்பதை கவனிக்கவில்லை. இந்த வீடியோ எடுக்கப்பட்டுவது குறித்து கண்காணிப்பு கேமராவின் பதிவுகளும் விசாரணை குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது  மருத்துவர்  பி.சரஸ்வதி கையெழுத்திடும் வீடியோ பதிவினை எடுத்தவர் தடயவியல் மருத்துவத் துறையில் அறிவியல் அதிகாரியாக பணிபுரியும் லோகநாதன் என்பது தொரியவந்துள்ளது. மேலும் விசாரணையில் வருகைப் பதிவேட்டில் டாக்டர் பி.சரஸ்வதியோ மற்ற மருத்துவர்களோ வராத நாட்களுக்கு கையொப்பம் இடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. கல்லூரியின் வருகைப்பதிவேட்டில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.* போலீசில் புகார்டாக்டர் பி.சரஸ்வதி, இந்த சம்பவத்தால் தனக்கு பயமாக இருப்பதாகவும், மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், மருத்துவமனை விசாரணை குழுவினரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் தனது சம்மதம் இல்லாமல், தன்னை வீடியோ படம் எடுத்த அறிவியல் அதிகாரி லோகநாதன் மீதும் ராயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை குழு முன் நேற்று லோகநாதன் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அதனடிப்படையில், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என மருத்துவமனை விசாரணை குழுவினர் தெரிவித்தனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை