ஸ்கேட்டிங் போட்டியில் மாணவர்கள் சாதனை

சின்னாளபட்டி : கர்நாடகா மாநிலம் பெல்ஹாமில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் சின்னாளபட்டி மாணவர்கள் உலக சாதனை படைத்தனர்.கர்நாடகா மாநிலம், பெல்ஹாமில் உலக சாதனைக்காக 96 மணி நேரம் இடைநில்லாமல் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுவை மற்றும் மற்றும் மாநிலங்களில் இருந்து 400 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழக அணியின் சார்பாக சின்னாளப்பட்டி ராஜன் உள் விளையாட்டரங்கில் பயிற்சிப் பெற்ற அகிலன், ஆதவன், ஜெயசூர்யா, பால தன்வந்த், ஹரி கோவிந்தன், கார்த்திக் நரேன், மோனிஷ், கார்த்திகேயா, நாகராஜன் சுதர்ஷன காளீஸ் ஆகியோர் அணியின் மேலாளர் மாஸ்டர் பிரேம்நாத் தலைமையில் பங்கேற்றனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் தொடர்ந்து இடைநில்லாமல் 96 மணி நேரம் விளையாடி உலக சாதனை படைத்து சான்றிதழ்களும் பதக்கங்களும் பெற்றனர். சாதனைப் படைத்த மாணவ, மாணவிகளையும் மாஸ்டர் பிரேம்நாத்தையும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்….

Related posts

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

திமுக பவளவிழாவை ஒட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக்கொடி பறக்கட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே சொத்துத் தகராறில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு