ஸ்கூலுக்கு போக லேட்டாகி போச்சே… பேருந்தை தவற விட்ட மாணவன் தற்கொலை

பீடல்: மத்தியப் பிரதேசத்தில் பள்ளிக்கு செல்லும் பேருந்தை தவற விட்டதால் மனமுடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், பீடல் மாவட்டத்தில் உள்ள ஆம்டோ கிராமத்தை சேர்ந்தவர் 9ம் வகுப்பு மாணவர். இவர், தனியார் பள்ளியில் பயின்று வந்தார். தினந்தோறும் பள்ளி பேருந்தில் சென்று வருவது வழக்கம். மேலும், மாணவன் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாணவன் வழக்கம் போல் பள்ளி பேருந்திற்காக வீட்டில் இருந்து சென்றுள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக பேருந்தை தவற விட்டதாக தெரிகிறது. இதனால், அழுதபடி வீடு திரும்பியுள்ளார். பெற்றோர் அவரை சமாதானம் செய்துள்ளனர். சிறிது நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு பின்புறம்  சென்ற மாணவன், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் சந்தேகம் அடைந்து சென்று பார்த்தபோது, அங்கிருந்த மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவர் இறந்து கிடந்துள்ளார். பள்ளி சீருடையிலேயே மாணவன் தூக்கில் தொங்கியதை கண்டு பெற்றோர் அலறி துடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவனின் மாமா கூறுகையில், ‘‘மாணவன் நன்றாக படிப்பான். பள்ளிக்கு நேரம் தவறாமல் செல்வதில் கண்ணும் கருத்தாக இருப்பான். ஒரு நாள் தாமதமாகி விட்டதால், இந்த முடிவை எடுத்தது வேதனை அளிக்கிறது,’’ என்றார்….

Related posts

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்

கேரள டிஜிபியின் மனைவியின் நிலம் ஜப்தி செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்: சுமூக தீர்வு ஏற்பட்டதால் வழக்கு வாபஸ்