ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக மக்கள் தொகை தின விழா

வீரவநல்லூர், ஜூலை 12: சேரன்மகாதேவியில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ஸ்காட் கல்வி குழுமங்களை ஒருங்கிணைத்து ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக மக்கள் தொகை தின விழா கொண்டாடப்பட்டது. இதில் சேரன்மகாதேவி வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் தலைமை வகித்தார். திறன் மேம்பாட்டு பயிற்சி துறை இயக்குநர் ரவிசங்கர், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மணிமாறன், நிர்வாக அலுவலர் சித்திரை சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாணவர்கள் மக்கள் தொகை கட்டுப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞசள் பை வழங்கப்பட்டது. விழாவில் மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் அட்மின் அதிகாரி அன்வர் ராஜா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் சிதம்பரம், முருகன், சுகாதார ஆய்வாளர் பூங்கொடி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி பிரதீப் செய்திருந்தார்.

Related posts

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய பாலப்பணியை அதிகாரிகள் ஆய்வு

போதை மாத்திரை விற்ற ரவுடி மீது குண்டாஸ்

கர்நாடகா தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை நிலுவையின்றி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை