வ.உ.சி. மைதானத்தில் குறுமைய அளவிலான தடகள போட்டிகள்-திரளான மாணவ-மாணவிகள் பங்கேற்பு

ஈரோடு : ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் குறுமைய அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில், திரளான மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களது தனித்திறமைகளை வெளிக்காட்டினர்.ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை, கொடுமுடி, பவானி, கோபி, நம்பியூர், சத்தி என 8 குறு மையங்கள் உள்ளன. இந்த குறுமையங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 14 வயது, 17 வயது மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு குறு மைய அளவிலான குழு போட்டிகளான வாலிபால், கால்பந்து, கூடைபந்து, கோ-கோ, திரோபால் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி துவங்கி, நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் 8 குறு மையங்களிலும் தடகள போட்டிகளான 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 1,500 மீட்டர் தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு ஏறிதல், ஈட்டி ஏறிதல் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் துவங்கியது. இதில், ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நேற்று ஈரோடு மேற்கு குறு மைய அளவிலான தடகள போட்டிகள் துவங்கியது. போட்டியினை ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இப்போட்டியில் வெற்றி பெறும் முதல் இரண்டு இடங்களை பிடிப்போர் அக்., மாதம் நடக்க உள்ள மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியிலும், அதில் சிறந்த இடங்களை பிடிப்பவர்கள் மண்டல அளவிலான போட்டியிலும், அதைத்தொடர்ந்து மாநில அளவிலான போட்டியிலும் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். இதேபோல், பெருந்துறை மையத்திலும், சத்தியமங்கலம் போன்ற பகுதிகளிலும் நேற்று குறு மைய அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. 8 குறு மையங்களிலும் தடகள போட்டிகள் வரும் செப். 21ம் தேதி நிறைவு பெற உள்ளது. போட்டிகளுக்கான ஏற்பாட்டினை ஈரோடு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சரோஜினி செய்துள்ளார்….

Related posts

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை

கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்