வையாவூர் கூட்ரோட்டில் உயர் கோபுர மின் விளக்கு வேகத்தடை இல்லாததால் விபத்து: பீதியில் வாகன ஓட்டிகள்

வாலாஜாபாத்: வையாவூர் கூட்ரோட்டில் உயர் கோபுர மின்விளக்கு, வேகத்தடை இல்லாததால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனே அப்பகுதியை கடந்து சென்று வருகின்றனர்.வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள வையாவூர் ஊராட்சியில் 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு ஊராட்சி நடுநிலைப் பள்ளி, ஆரம்பப் பள்ளி, அங்கன்வாடி மையம், நூலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதுமட்டுமின்றி, இந்த ஊராட்சியை சுற்றிலும் ஐந்துக்கும் மேற்பட்ட நகர் பகுதிகள் உள்ளன. இந்த ஊராட்சியை ஒட்டி காஞ்சிபுரத்தில் இருந்து வையாவூர், கலியனூர் வரை செல்லும் பிரதான சாலை உள்ளது.இந்த சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் காஞ்சிபுரத்துக்கு சென்று வருகின்றன. இந்த சாலையை ஒட்டி காமாட்சி நகர் மற்றும் கலியனூர் செல்லும் 3 வழி சாலை சந்திப்பு உள்ளது. இங்கு இதுவரை உயர்கோபுர மின்விளக்குகளோ, வேகத் தடைகளோ அமைக்கப்படவில்லை. இதனால், இங்கு இரவு நேரங்களில் அதிகளவு வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. சாலையை கடப்பவர்கள் மீது வாகனங்கள் மோதி பலர் படுகாயம் அடைகின்றனர். ஒருசிலர் பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.எனவே, இந்த 3 சாலை சந்திப்பு பகுதியில் விபத்துகளை தடுக்கும் வகையில் உயர்கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும். மேலும், இங்கு வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி ெபாதுமக்கள் வலியுறுத்துகின்றனர்….

Related posts

நிபா வைரஸ்: நீலகிரி அருகே தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதிகளில் வாகனங்கள் தீவிர கண்காணிப்பு

நெல்லை அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு!!

சிவகங்கை மாவட்டத்தில் 4,600 மெட்ரிக் டன் யூரியா கையிருப்பு