வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்: ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் ஒவ்வொரு அமாவாசையன்றும் கோயிலுக்கு அருகில் உள்ள ஹிருதாபநாசினி குளத்தில் புனித நீராடி வீரராகவரை வழிபட்டால் நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் காட்சி அளித்த நாள் என்பதால் தை அமாவாசையன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், இங்கு வந்து ஸ்ரீவைத்திய வீரராகவரை வழிபடுவது வழக்கம். இந்நிலையில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வைத்திய ஸ்ரீவீரராகவர் பெருமாள் கோயிலில் தை மாத பிரமோற்சவ விழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தை மாத பிரமோற்சவ விழாவின் 5ம் நாளான நேற்று தை அமாவாசையையையொட்டி காலை 5 மணி முதல் உற்சவர் வீரராகவர் ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இந்த ஆண்டின் தை அமாவாசையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு முதலே திருவள்ளூர் வந்தனர். இவர்களுக்கு தங்க இடமின்றி கோயில் வளாகம், பஸ் நிலையம், மூடிக்கிடக்கும் கடையில் நடைமேடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கியிருந்தனர். இதையடுத்து, நேற்று அதிகாலை கோயில் மாட வீதியில் காத்திருந்த புரோகிதர்கள் மூலம் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். பின்னர், கண்ணாடி மண்டபத்தில் ரத்னாங்கி சேவையில் எழுந்தருளிய உற்சவர் ஸ்ரீவைத்திய வீரராகவ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மூலவர் ஸ்ரீவைத்திய வீரராகவ பெருமாளை பக்தர்கள் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். பக்தர்கள் வருகை திடீரென அதிகரித்ததால், திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் துணை போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்….

Related posts

திருவள்ளூர் மாவட்ட மின்வாரியத்துக்கு புதிய மேற்பார்வை பொறியாளர் பொறுப்பேற்பு

டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம்

ஒன்றிய அரசை கண்டித்து 5 நாட்கள் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: அவசர தீர்மானம் நிறைவேற்றம்