வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம்: பேரவையில் மசோதா தாக்கல்

சென்னை: சட்டப் பேரவையில் நடந்த மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்  தாக்கல் செய்தார். அதன் விவரம் வருமாறு:தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டம் 27/1989 33வது பிரிவின் (1)ம் உட்பிரிவின்படி கூறப்பட்ட வகைமுறையின் விளைவாக சந்தைக் குழுக்களின் அலுவல்களை மேலாண்மை செய்ய அமர்த்தப்பட்ட தனி அலுவலர்கள் பதவிக் காலம் அவ்வப்போது 3 ஆண்டுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டது. இறுதியாக தமிழ்நாடு சட்டம் 31/2020 மூலம் தனி அலுவலர்களின் பதவிக் காலம் 9 வருடங்கள் மற்றும் 6 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவர்களின் பதவிக் காலம் 2020 நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைந்தது. இவர்களின் பதவிக் காலம் முடியும் முன்பே 14 சந்தைக் குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், 10 சந்தைக் குழுக்களுக்கும் உறுப்பினர் நியமிக்கப்பட்டனர். தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டனர். அதற்கு பிறகு 2021 ஜூலை மாதம் மேற்கண்ட 24 உறுப்பினர்களும் திரும்பப் பெறப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், 2020ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதியில் இருந்தும், அவர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவும், அவர்கள் பணியமர்த்தப்பட்ட நடவடிக்கையை செல்லத்தக்கதாக்குவது முறையானது மற்றும் அவசியமானது. எனவே, தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தை திருத்தம் செய்வது என அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு செயல்வடிவம் கொடுக்க விரும்புகிறது.இவ்வாறு மசோதாவில் அமைச்சர் தெரிவித்துள்ளார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்