வேளாண் பல்கலையில் பைலட் பயிற்சி நிறுவனம் சான்றிதழ் வழங்கும் விழா

 

கோவை, ஜூலை 3: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தை தொலைதூர விமான ஓட்டிகள் பயிற்சி நிறுவனமாக சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனர் அங்கீகரித்துள்ளார். இது தொடர்பாக வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் பயிலுநர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. துணைவேந்தர் குழு அறையில் நடந்த விழாவில், நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தேசிய வேளாண் உயர் கல்வி திட்டத்தின் ஆதரவுடன் தொலைதூர பைலட் செயல்பாடுகளில் பயிற்சியை முடித்த 104 பேரின் சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டது.

இத்திட்டம் பட்டதாரிகளை ஆளில்லா வான்வழி வாகன செயல்பாடுகளில் அத்தியாவசிய திறன்களுடன் மேம்படுத்தப்படுகிறது. இப்பயிற்சியானது விவசாயம், பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆய்வுகளுக்கு இன்றியமையாதவை. இந்நிலையில், பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் வேளாண் நடைமுறைகளில் புதுமைகளை வளர்ப்பதில் பல்கலைக்கழகத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தி சான்றிதழ்களை வழங்கினார்.

Related posts

புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்மாய், குளங்களில் வண்டல், களிமண் எடுக்கலாம்

புதுகை மாவட்ட வள பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

தொழில்முனைவோர் ஆலோசனை கூட்டம்