வேளாண் சட்ட விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி… விவசாயிகள் நலனுக்காக தொடர்ந்து உழைப்போம் எனவும் சூளுரை!!

டெல்லி : வேளாண் சட்ட விவகாரத்தில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டுள்ளார். நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று காலை உரையாற்றினார்.அப்போது, மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை இன்று முதல் வாபஸ் பெறப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை விவசாயிகளும் திரும்பப் பெற வேண்டும் என்றும் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வேளாண் சட்டங்கள் குறித்து பேசிய அவர், ‘வேளாண் விளைபொருட்கள் சுலபமாக விற்பனை செய்வதற்கு பல திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது. மூன்று வேளாண்  சட்டங்களுக்கும் ஆதரவளித்த விவசாய சங்கங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.அதே சமயம் மூன்று பேரும் சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் மிக விரிவான விவாதம் நடத்தப்பட உள்ளது.விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன; ஆனால், எங்களால் வேளாண் சட்ட நலனை ஒரு பிரிவு விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை. தொடர் முயற்சி செய்தும் வேளாண் சட்ட நலனை விளக்குவதில் வெற்றி பெற முடியவில்லை. வேளாண் சட்டங்களின் நலனை விளக்க முடியாதது எங்களுடைய தவறு.வேளாண் சட்ட விவகாரத்தில் நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்.வேளாண் துறைக்கு பல்வேறு புதிய நடவடிக்கைகள் மூலம் ஊக்கமளிக்க குழு அமைக்கப்படும்.குழுவில் விவசாயிகள் , விஞ்ஞானிகள், வல்லுநர்கள் இடம்பெறுவர்.விவசாயிகள் நலனுக்காக தொடர்ந்து உழைப்போம்,’ என்றார். …

Related posts

பெண் மருத்துவர் கொலை நடந்து ஒரு மாதம் நிறைவு; மேற்குவங்கத்தில் விடியவிடிய போராட்டம்: மம்தா அரசுக்கு நெருக்கடி அதிகரிப்பு

40 வயது ஆசாமியுடன் சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: கேரளாவில் பரபரப்பு

காஷ்மீர் இந்து வாக்காளர்களை பா.ஜ.க மிரட்டுவதாக புகார்; தீவிரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதா? என பருக் அப்துல்லா கேள்வி